17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

செங்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan September 4, 2020, 3:41 pm

மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் ஒருபகுதியாக திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், மேல்புழுதியூர், பக்கிரிபாளையம் ஆகிய 4 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.செங்கம் பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சர்தார் தலைமையிலும், மேற்கு மதியம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வஜீர் பாஷா தலைமையிலும், பக்ரிபாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அமித் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில நிர்வாகக்குழு ஜோதி, மாதேஸ்வரன், ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.ஆர்ப்பாட்டத்தில் கடும் நெருக்கடியில் சிறு வியாபாரிகள் தொழில் நிறுவனங்கள் சார்ந்த கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும், சிறு குறு வியாபாரிகள் தொழில் தொடர்ந்திட நிபந்தனையற்ற கடன் வழங்க வேண்டுமென்றும், புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், கருணா கணவனால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சி முடிவில் ஒன்றிய நிர்வாகக்குழு ஜக்கரியா நன்றி கூறினார் இந்நிகழ்வானது சமூக இடைவெளியை பின்பற்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தியாளர் செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!