18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வராக நதி மீட்புக்குழு அமைக்க பெரியகுளம் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்.

வராக நதி மீட்புக்குழு அமைக்க பெரியகுளம் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்.

எழுதியவர்: mohan September 3, 2020, 1:39 pm

தேனி மாவட்டம் பெரியகுளம் வராக நதியில் கொட்டப்படும் குப்பை மற்றும் கழிவுநீர் கலப்பதை தடுக்க குடியிருப்புவாசிகள் உடன் இணைந்து தன்னார்வலர்கள் வராக நதி மீட்புக்குழு அமைக்க பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம்.தேனி மாவட்டம் பெரியகுளம் நகரின் மையப் பகுதியில் ஓடும் வராக நதியில் தொடர்ந்து குப்பை கழிவுகள் சாக்கடை கழிவுகள் கலந்து வராக நதி மாசடைந்து வருவதால் வராக நதியை மீட்டெடுக்க பெரியகுளம் நகர் நல சங்கம் மற்றும் வராக நதியின் இரு புறங்களிலும் உள்ள குடியிருப்புவாசிகள் மற்றும் தன்னார்வலர்கள் உடன் இணைந்து நதியின் 100 மீட்டர் தொலைவிற்கு ஒரு குழுக்களை அமைத்து அந்தக் குழுக்கள் மூலம் நதியை சுத்தப்படுத்த அவர்களை கண்காணித்து நதியில் குப்பைகளையும் கழிவுகளையும் கொண்டவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ள இன்று பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் வராக நதியை மீட்டெடுக்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி மற்றும் தெருமுனைப் பிரச்சாரங்கள் செய்வதென முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பெரியகுளம் நகர் நல சங்க நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!