18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தொடர் மழை காரணமாக மதுரை பழங்காநத்தம் பகுதியில் மேற்கூரை இடிந்து வீடு சேதம்..

தொடர் மழை காரணமாக மதுரை பழங்காநத்தம் பகுதியில் மேற்கூரை இடிந்து வீடு சேதம்..

எழுதியவர்: ஆசிரியர் September 2, 2020, 7:54 pm

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஆங்காங்கே மழை பெய்து கொண்டு வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நேற்று மாலையில் தொடங்கிய மழை இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக பெய்தது. இதனால் ஆங்காங்கே மரங்கள் கீழே விழுந்ததோடு மட்டுமில்லாமல் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இந்நிலையில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் திரிசூல காளியம்மன் தெருவில் மழை காரணமாக மேற்கூரை இடிந்து விழுந்தது. அச்சமயம் வீட்டில் இருந்தவர்கள் குடிநீர் பிடிப்பதற்காக வீட்டின் எதிரே உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்ததால் பெரிதாக சேதம் ஏற்படவில்லை.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!