18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் சரக்கு வேன் மோதிய விபத்தில் ஒருவர் பலி 7 பேர் படுகாயம்..

திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் சரக்கு வேன் மோதிய விபத்தில் ஒருவர் பலி 7 பேர் படுகாயம்..

எழுதியவர்: ஆசிரியர் September 2, 2020, 7:45 pm

திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் பழுதடைந்து என்ற சரக்கு வேன் மீது கோயம்புத்தூரில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்ற சரக்கு வேன் மோதிய விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார், வேனில் வந்த கூலித் தொழிலாளிகள் 7 பேர் படுகாயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார் வேனில் வந்த கூலித் தொழிலாளிகள் 7 பேர் படுகாயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் திருமங்கலம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த வேன் ஓட்டுநர் கோபியை ஒரு மணி நேரம் திருமங்கலம் தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டு அவரது உடலை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர. மேலும் விபத்து குறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழுதடைந்த வேன் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் ஒருவர் பலியாகி 7 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது செய்தியாளர்.

வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!