18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரை முஹ்யித்தீனியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி..

கீழக்கரை முஹ்யித்தீனியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி..

எழுதியவர்: ஆசிரியர் September 2, 2020, 4:09 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஹ்யித்தீனியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி 2020- 2021ஆம் ஆண்டுக்கான பாட புத்தகத்தை விலையில்லாமல் 2.9.2020 இன்று வழங்கப்பட்டது.

தற்சமயம் கொரோனா நோய்த்தொற்று காலம் என்பதால் பெருவாரியான மக்களுக்கு போதிய வருமானம் இல்லாத சூழ்நிலையை கருத்தில் கொண்டு முஹ்யித்தீனியா பள்ளியில் இந்த ஆண்டு 35% பள்ளி கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்ததுள்ளது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கீழக்கரை டிஎஸ்பி முருகேசன் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கும் பாட புத்தகத்தை வழங்கினார். பள்ளி உபதலைவர் முகைதீன் இப்ராஹிம் தலைமை ஏற்றார். பள்ளி தாளாளர் E.M.S மௌலா முகைதீன், செயலாளர் டாக்டர் ராசீக்தீன், பொருளாளர்  சேகு பஷீர், உறுப்பினர் ரபீக் சாதீக், ஹனீப், கலந்து கொண்டார்கள். பள்ளியின் தலைமை ஆசிரியர் சேகு சகுபான் பாதுஷா அனைவரையும் வரவேற்றார்.

இவ்விழாவில் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!