18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவாடானை ஒன்றியம் கூகுடி ஊராட்சி விசும்பூர் வடக்கு குடியிருப்பு கிராமத்தில் சாலை, குடிநீர் வசதி செய்து தரக் கோரிக்கை:

திருவாடானை ஒன்றியம் கூகுடி ஊராட்சி விசும்பூர் வடக்கு குடியிருப்பு கிராமத்தில் சாலை, குடிநீர் வசதி செய்து தரக் கோரிக்கை:

எழுதியவர்: mohan September 1, 2020, 11:35 am

மக்கள் பாதை பேரியக்கம் சார்பாக திருவாடானை ஒன்றியம் கூகுடி ஊராட்சி விசும்பூர் வடக்கு குடியிருப்பு கிராமத்தின் பல ஆண்டுகளுக்கு மேல் பூர்த்தி செய்யப்படாத அடிப்படை தேவைகளான கிராம சாலை, குடிநீர் மற்றும் கண்மாய் தூர்வாருதல் போன்றவற்றை சரி செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

மனு வழங்கும் போது மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் கிளாட்வின், திருவாடானை ஒன்றிய இணை ஒருங்கிணைப்பாளர் சரவணன் ,மாவட்ட நீதி திட்ட பொறுப்பாளர் சந்திரசேகர், மாவட்ட மாணவரணி பொறுப்பாளர் மதிவாணன், மற்றும் ஒன்றிய திட்ட பொறுப்பாளர்கள் ஜெகதீசன், ராஜ்குமார், தன்னார்வலர் அப்துல் கலாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.திருவாடானை வட்டாட்சியர்மற்றும் கூகுடி ஊராட்சி நிர்வாகிகளுக்கு அஞ்சல் மூலம் மனு கொடுக்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!