18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மத்திய மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்-நீட் ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தல்…

மத்திய மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்-நீட் ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தல்…

எழுதியவர்: mohan August 28, 2020, 7:38 pm

தென்காசி மாவட்டம் சுரண்டையில் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும்,நீட்,ஜே இ இ தேர்வை ரத்து செய்யக்கோரியும் காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சோனியா காந்தி ஆணையின் படியும், மாநில தலைவர் கே எஸ் அழகிரி அறிவுறுத்தலின் படியும், மாணவர்கள் நலன் கருதி நீட் மற்றும் ஜே இ இ போன்ற நுழைவுத் தேர்வு ரத்து செய்திட வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகளின் செயலை கண்டித்து சுரண்டையில் மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனிநாடார் தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும்,நீட்,ஜே.இ.இ தேர்வுகளுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் முரளிராஜா பால் (எ) சண்முகவேல் ராமராஜ் தெய்வேந்திரன் கந்தையா சமுத்திரம் மற்றும் அண்ணாமலை பிரபு ஊடக பிரிவு சிங்கராஜ் தங்கம் காமராஜ் மற்றும் ஏராள காங்கிரஸ் தேசிய நெஞ்சங்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!