17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan August 28, 2020, 2:49 pm

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திரனாளிகள் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாவட்டம் முழுவதும் 13 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.அதில் ஒருபகுதியாக ஆத்தூர் தாலுகா செம்பட்டியில் மாவட்ட தலைவர் செல்வநாயகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் கொரொனா நோய்தொற்றை காரணம் காட்டி விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்றுத்திரனாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

glஆகவே ,ஈ- சேவை மையங்களில் உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்கும் மாற்றுத் திரனாளிகளின் சிரமங்களை போக்கிட வேண்டியும் மாற்றுத் திரனாளிகளுக்கான உதவித்தொகை வேண்டி மூன்று மாதங்களுக்கு முன்னதாக மாவட்டம் முழுவதும் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை ஏற்றுஉடனடியாக உதவித்தொகை வழங்கிட வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி செம்பட்டியில் உள்ள ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவகம் முன்பு மாற்றுத்திரனாளிகள் கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதில் ஏராளமான மாற்றுத்திரனாளிகள் கலந்துகொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!