17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மோசமான சாலையால் இருவர் பலி

மோசமான சாலையால் இருவர் பலி

எழுதியவர்: mohan August 27, 2020, 4:54 pm

தென்காசி – நெல்லை செல்லும் பிரதான சாலையானது போக்குவரத்து மேற்கொள்ள ஏற்ற சாலையாக இல்லாமல் பழுதடைந்து படுமோசமாக உள்ளது.சாலையின் நடுவே விபத்தினை ஏற்படுத்தும் வகையில் குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. இந்நிலையில் நேற்றிரவு 9 மணியளவில் கரும்புளியூத்து தனியார் நூற்பாலை அருகே ஏதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் விபத்தினை ஏற்படுத்தி தப்பி சென்று விட்டது.இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த பூலாங்குளம் ஊரை சேர்ந்த ரிதிஸ் சந்தர் (14) சம்பவ இடத்தில் பலியானார். படுகாயம் அடைந்த திருமலை குமரசாமி (34) மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இந்நிலையில் தென்காசி-நெல்லை பிரதான சாலையை விரைந்து சீரமைத்து விபத்தினை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்பதே வாகன ஓட்டிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!