18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரையில் கேன்சர் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம்…

கீழக்கரையில் கேன்சர் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம்…

எழுதியவர்: ஆசிரியர் September 19, 2017, 5:28 pm

கீழக்கரையில் இன்று (19-09-2017) இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், ரோட்டரி சங்கம் சார்பாக பெண்களுக்கான கேன்சர் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ரோட்டரி ஆளுநர் டாக்டர்.சின்னதுரை அப்துல்லா சிறப்புரையாற்றி துவக்கி வைத்தார். இஸ்லாமியா பள்ளி தாளாளர் எம்.எம்.கே.ஜமால் இப்பராஹீம் அவர்கள் முன்னிலை வகித்தார். நிகழ்வின் வரவேற்புரையை சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன் வழவ்கினார்.

அதைத் தொடர்ந்து ரோட்டரி துணை ஆளுநர் டாக்டர் ஜெகதீஸ் சந்திர போஸ் கேன்சர் நோய் பற்றிய விழிப்புணர்வு உரையாற்றினார். கனகமணி மருத்துமனை டாக்டர் மதுரம் அரவிந்தராஜ் மற்றும் டாக்டர் பிரியா பால்ராஜ் கேன்சர் நோய் , பெண்களுக்கு ஏற்படும் விளைவு பற்றிய விழிப்புணர்வு உரையாற்றி, அது சம்பந்தமான பரிசோதனையும் செய்தனர். இந்நிகழ்ச்சியில் பல் வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் கலந்து கொண்டனர் .

மருத்துவ முகாம் ஏற்படுகளை சங்கத்தின் தலைவர், செயலர், டாக்டர் ராசிக்தீன் மற்றும் எபன் ஆகியோர் முன்னெடுத்துச் செய்திருந்தனர். மேலும் பல ரோட்டரி உறுப்பினர்கள் முகாமில் கலந்து கொண்டனர். இறுதியாக சங்க செயலர் தர்மராஜா நன்றியுரை வழங்கினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!