18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் திருப்புல்லாணி ஒன்றிய பள்ளி கட்டிட அடிக்கல் நாட்டினார்..

இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் திருப்புல்லாணி ஒன்றிய பள்ளி கட்டிட அடிக்கல் நாட்டினார்..

எழுதியவர்: ஆசிரியர் August 24, 2020, 2:32 pm

இராமநாதபுரம் மாவட்டம் 24.8.2020 திருப்புல்லாணி  ஒன்றியத்துக்குட்பட்ட மாவிளா தோப்பு அரசு நடுநிலை பள்ளியில் மேலும் இரு வகுப்பறைகள் கட்டிடம் கட்ட தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 18 லட்சத்தை ஒதுக்கீடு செய்து இன்று (24/08/2020) இராமநாதபுரம் தொகுதி எம்எல்ஏ மணிகண்டன் அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்வின் போது நிருபர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர், “உள்ளாட்சித் தேர்தலின்போது கிராம மக்கள் இப்பகுதிக்கு பள்ளிக்கூடம் தேவை என்று கூறினார்கள் அதை ஏற்று இன்று தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து, 6 மாத காலத்திற்குள் கட்டிடத்தை கட்டி முடிக்கப்படும்” என்று உறுதி அளித்தார்.

இவ்விழாவில் கீழக்கரை நகர் கழக செயலாளர் ஜகுபர் உசேன், இப்பள்ளியின் தலைமை ஆசிரியர், மற்றும் ஆசிரியர்கள், தில்லையேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி, அதிமுக திருப்பணி ஒன்றிய செயலாளர் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

கீழை நியூஸ் S.K.V சுஐபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!