17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மதுரையில் மது போதையில் தகராறு.. இளைஞர் கொடூரமாக வெட்டிக்கொலை : போலீஸ் விசாரணை..!!!

மதுரையில் மது போதையில் தகராறு.. இளைஞர் கொடூரமாக வெட்டிக்கொலை : போலீஸ் விசாரணை..!!!

எழுதியவர்: ஆசிரியர் August 22, 2020, 11:56 pm

மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் 29 வயது, இவர் மாநகராட்சியின் கொரோனா தடுப்பு பணியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் ஆரப்பாளையம் பகுதியில் பிள்ளைமார் தெரு உள்ள பொது கழிவறை வாசலில் நண்பருடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த போது நண்பர்களுடன் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சக நண்பர்கள் பார்த்திபனை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரிமேடு காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள மூன்று நண்பர்களை தேடி வருகிறார்கள், மதுபோதையில் நண்பனையே கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!