17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தொடரும் ஏடிஎம் கொள்ளை முயற்சி…..

தொடரும் ஏடிஎம் கொள்ளை முயற்சி…..

எழுதியவர்: mohan August 21, 2020, 6:32 pm

மதுரை மாவட்டம் மதுரை மேலூர் மெயின் ரோட்டில் உலக நேரியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் அதிகாலை புகுந்த நான்கு நபர்கள் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொண்டு இருந்தனர். பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு பணம் எடுப்பதற்காக வந்திருந்த நபர் கூச்சலிடவே சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள்  வாகனத்தில் தப்ப முயன்ற நான்கு பேர்களில் இரண்டு நபர்களை பொதுமக்கள் பிடித்து ஒத்தக்கடை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் மதுரை வரிச்சூர் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. மேலும் தப்பிய இரண்டு நபர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள் .கடந்த சில நாட்களுக்கு முன் மேலூர் அருகே ஒரு ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கதாகும் .

செய்தியாளர். வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!