17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி சார்பாக 12ம் வகுப்பு வரை முதல் பருவ சமசீர் கல்வி புத்தகம் விலையில்லாமல் வழங்கப்படுகிறது..

கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி சார்பாக 12ம் வகுப்பு வரை முதல் பருவ சமசீர் கல்வி புத்தகம் விலையில்லாமல் வழங்கப்படுகிறது..

எழுதியவர்: ஆசிரியர் August 21, 2020, 1:56 pm

கொரோனா கிருமி பாதிப்பினால் உலகம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் முதல் அனைத்து தரப்பு மக்களும் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகள் தங்கள் நிறுவனங்களின் சூழ்நிலைக்கு ஏற்ப, மாணவ, மாணவிகளின் நலன் கருதி பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரையில் உள்ள பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் படிக்கும் கல்வி நிர்வாகத்திடம் சலுகைகள் வழங்க கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர்.

இதை தொடர்ந்து கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி சார்பாக பல லட்சம் மதிப்புள்ள 12ம் வகுப்பு வரை முதல் பருவ (FIRST SEMESTER)  சமசீர் கல்வி புத்தகம் விலையில்லாமல் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பெற்றோர்களுக்கு ஒரு வகையில் பாரம் குறைய வாய்ப்பாகும்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!