17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராஜபாளையம் அருகே AlTUC கைத்தறி நெசவாளர்கள் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்…

ராஜபாளையம் அருகே AlTUC கைத்தறி நெசவாளர்கள் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் August 20, 2020, 7:24 pm

ராஜபாளையம் அருகே ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் நெசவாளர்களுக்கு உடனடியாக கூலி வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி AlTUC கைத்தறி நெசவாளர்கள் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் சந்தை கடை முக்கு பகுதியில் ஏஐடியூசி கைத்தறி நெசவாளர் சம்மேளனம் சார்பில் ராஜகுரு தலைமையில் கூட்டுறவு சங்க நெசவாளர் பட்டினி அபாயத்தை தடுத்திட பெரு நிறுவனங்கள் மூலம் ஊடைக்கு நூல் வழங்கும் மாநில டெண்டர் முறையை ரத்துசெய்து உற்பத்திக்குத் தேவையான நூலை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ மாவட்ட செயலாளர் லிங்கம் ஒன்றிய செயலாளர் வீராச்சாமி 50 பெண்கள் உள்பட 120க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!