தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஜி.உசிலம்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் மின் அழுத்த காரணமாக வீட்டில் இருந்த 40க்கும் மேற்பட்ட வண்ணத் தொலைக் காட்சி பெட்டிகள். முப்பதுக்கும் மேற்பட்ட மின் விசிறிகள். பத்துக்கும் மேற்பட்ட பிரிட்ஜ் கள். 70க்கும் மேற்பட்ட செட்டாப் பாக்ஸ்கள்.செல்போன் சார்ஜர்கள் என பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மின்சாரத் துறையினரின்
அலட்சியப் போக்கால் சேதமானதாக பாதிக்கப்பட்ட வர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து பாதிக்கப்பட்ட அவர் கூறுகையில்,ஜி.உசிலம்பட்டி கிராமத்தில் இருக்கின்ற டிரான்ஸ்பார்மர் உரிய பராமரிப்பு இல்லாததால் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும், இது சம்பந்தமாக மின்சாரத்துறை யினருக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் கண்டுகொள்வது இல்லை. இதனால் மின் அழுத்த காரணமாக வீடுகளில் இருந்த டிவி ஃப்ரிட்ஜ் செல்போன் சார்ஜர் என பல லட்சம் பொருட்கள் வெடித்து சாம்பலாகியது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக வீடுகளில் இருந்த குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். தற்பொழுது அரசாங்கம் தொற்று காரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஆகையால் மின்சார துறையினர், பெரும் விபத்து நடைபெறுவதற்கு முன்பாக மிக விரைவில் ஊரிலுள்ள டிரான்ஸ்பார்மரை உரிய பராமரிப்பு செய்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
சாதிக்பாட்சா. நிருபர் தேனி மாவட்டம்




You must be logged in to post a comment.