18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் தொகுதி குப்பைக் கிடங்கை பார்வையிட வந்த எம்எல்ஏ..

கீழக்கரையில் தொகுதி குப்பைக் கிடங்கை பார்வையிட வந்த எம்எல்ஏ..

எழுதியவர்: ஆசிரியர் August 18, 2020, 5:47 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புது கிழக்குத் தெரு பெரிய காட்டு பகுதியில் உள்ள குப்பை மறுசுழற்சி உரம் தயாரிக்கும் இடத்தை மாற்றி அங்கு பூங்கா, ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது விளையாட்டு மைதானம் அமைத்து தரக்கோரி ஜமாத்தார்கள் சில நாட்களுக்கு முன்பு ராதாபுரம் தொகுதி எம்எல்ஏ மணிகண்டனை சந்தித்து மனு அளித்தனர்.

அதைத்தொடர்ந்து இன்று எம்எல்ஏ அந்த இடத்தை பார்வையிட கீழக்கரைக்கு வருகை தந்தார் அவரை கீழக்கரை ஜமாத்தார்கள் மற்றும் அப்பகுதி மக்கள் இப்பகுதிக்கு குப்பை உரமாக்கும் திட்டம் தேவை இல்லை பூங்காவாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். கீழக்கரை நகராட்சி ஆணையாளர் மற்றும் தலைமைப் பொறியாளரிடம் இந்த இடத்தில் குப்பை மறுசுழற்சி உரம்தயார் செய்வதைப் பற்றி எம்எல்ஏ கேட்டறிந்தார். உடன் கீழக்கரை நகரச் செயலாளர் ஜகுபர் உசேன் மற்றும் அதிமுகவினர் பலர் இருந்தனர்.

கீழை நியூஸ் S.K.V சுஐபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!