18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசியில் தூய்மையை வலியுறுத்தி ஓவியப்போட்டி- ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவி வெற்றி…

தென்காசியில் தூய்மையை வலியுறுத்தி ஓவியப்போட்டி- ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவி வெற்றி…

எழுதியவர்: mohan August 18, 2020, 10:25 am

தென்காசியின் தூய்மையை வலியுறுத்தி பள்ளிகளிடையே ஓவியப்போட்டி நடைபெற்றது.தூய்மை தென்காசி என்ற ஓவியப் போட்டியில் தென்காசி குத்துக்கல் வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி வெற்றி பெற்றார்.பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசுத்துறை அதிகாரிகள் பாராட்டினர்.தென்காசியை தூய்மைப்படுத்தும் பணியில் காவல்துறை, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம் ஆகியவை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி தென்காசி நகராட்சி பகுதிகளில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் சுவரொட்டிகள் ஒட்டப்பட வேண்டும். மற்ற இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பேருந்து நிலையம் உள்ளிட்ட அரசு மற்றும் பொது நிறுவன சுவர்களில் விழிப்புணர்வு ஓவியங்கள் இடம் பெற வேண்டும் என்றும், இதற்காக பள்ளி மாணவ, மாணவிகளிடையே ஓவியப்போட்டி நடத்தி அதில் தேர்வு செய்யப்படும் ஓவியங்கள் அரசு சுவர்களில் ஓவியர்கள் மூலம் வரையப்படும் என அறிவிக்கப்பட்டது.இதனையடுத்து நடைபெற்ற ஓவியப்போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 8ஆம் வகுப்பு மாணவி வி.ஜெரினா வின்ஸி வரைந்த ஓவியம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இம்மாணவி வரைந்த ஓவியம் தென்காசி பேருந்து நிலைய சுவரில் வரையப்படுகிறது.மாணவி ஜெரினா வின்ஸியை பாராட்டி தென்காசி டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஆடிவேல் ஆகியோர் சான்றிதழ் வழங்கினர். இம்மாணவியை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் கே.திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, இயக்குநர் தி.மிராக்ளின் பால்சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவித் தலைமையாசிரியை க. சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே.எஸ்.கணேசன் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் பெற்றோர்கள் பாராட்டினர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!