17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குப்பை மேட்டில் வைத்து மதுபானம் விற்பனை செய்த நபர் கைது. 920 மதுபான பாட்டில்கள் பறிமுதல்..

குப்பை மேட்டில் வைத்து மதுபானம் விற்பனை செய்த நபர் கைது. 920 மதுபான பாட்டில்கள் பறிமுதல்..

எழுதியவர்: mohan August 16, 2020, 10:28 am

சுதந்திர தின விழா மற்றும் முழு ஊரடங்கு காரணமாக இன்று மற்றும் நாளை மதுபான கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு உள்ளது.இதனால் சட்டத்திற்கு விரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்வது மதுரை மாவட்டம் முழுவதும் அதிகரித்து உள்ளது.மதுரை மாவட்டம் சிலைமான் அருகே கல்லுமேடு பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக மதுபான பாட்டில் விற்பனை செய்வதாக சிலைமான் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.தகவலின் அடிப்படையில் சிலைமான் காவல்துறையினர் கல்லுமேடு பகுதியில் சோதனை செய்தனர் அப்போது போஸ்வயது 67 என்பவர் குப்பை மேட்டில் பதுக்கி வைத்து மதுபானம் விற்பனை செய்தது தெரிய வந்தது.இதனையடுத்து சிலைமான் காவல்துறையினர் சட்டத்திற்கு புறம்பாக மது பாட்டில் விற்பனை செய்த போஸ்யை கைது செய்து குப்பைமேட்டில் பதுக்கி வைத்திருந்த 920 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!