17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாரம்பரிய முறையில் சீரமைப்புப் பணிகள் – முழுவீச்சில் தயாராகும் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை..

பாரம்பரிய முறையில் சீரமைப்புப் பணிகள் – முழுவீச்சில் தயாராகும் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை..

எழுதியவர்: ஆசிரியர் August 12, 2020, 7:50 pm

மன்னர் காலத்துப் பாரம்பரிய முறையில் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் சீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் தற்போது நடைபெற்று வருகின்றன.  சில மாதங்களில் அரண்மனை மிகப் பொலிவுடன் தயாராகிவிடும்.

மதுரையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் திருமலை நாயக்கர் அரண்மனை, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சிறந்த தலமாகும்.  ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியின் அடிப்படையில் பல்வேறு சீரமைப்புப் பணிகள் ரூபாய்  3கோடி மதிப்பீட்டில் பணி  நடைபெற்று வருகின்றன.

இந்தோ சாராசானிக் என்று சொல்லப்படுகின்ற இந்திய, ரோமானிய மற்றும் மொகாலய கட்டிடக்கலைப் பாணியை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்ட மன்னர் திருமலை நாயக்கரின் அரண்மனையில் பாரம்பரிய முறைப்படி சிமெண்ட் பயன்படுத்தாமல், சுண்ணாம்புக் கலவை, கடுக்காய் மற்றும் கருப்பட்டிச்சாறு ஆகியவை கொண்டே அரண்மனை தூண்கள் மற்றும் சுவர்களில் உள்ள விரிசல்கள் பூசப்பட்டு வருகின்றன.

தற்போது புறாக்கள் உள்ளே வராத வண்ணமும் புறாக்களின் எச்சம் காரணமாக அரண்மனையில் உள்ள தூண்கள் பொலிவுற்று காணப்படுவதை கருத்தில் கொண்டு திறந்த வெளி பகுதிகளில் கம்பி வலை போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

புதுப்பொலிவுடன் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு மன்னர் திருமலை நாயக்கர் அரண்மனை எதிர்பார்த்து ஒட்டுமொத்த மதுரை வாசிகளும் சுற்றுலா பயணிகளும் காத்திருக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!