18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆர்.எஸ். மங்கலம் அரசுப் பள்ளி மாணவர்கள் கலாம் கனவு மாணவர் விருது பெற்று சாதனை

ஆர்.எஸ். மங்கலம் அரசுப் பள்ளி மாணவர்கள் கலாம் கனவு மாணவர் விருது பெற்று சாதனை

எழுதியவர்: mohan August 12, 2020, 11:00 am

டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை சார்பாக ஒவ்வொரு வருடமும் பள்ளி மாணவர்களின் தனித்திறனை பாராட்டி கலாம் கனவு மாணவர் விருது வழங்கி சிறப்பித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த வருடம் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் ஆர்.எஸ். மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் பி.விஷால் ஓவியத் திறமைக்காகவும், இ.முகமது ஆதில் பேச்சுத்திறனுக்கும் ஜ.பாஸித் அறிவியல் ஆய்வுத் திறனுக்கும் கலாம் கனவு மாணவர் விருது -2020 பெற்று பள்ளிக்கும், நகருக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். தமிழகம் முழுவதும் 100 மாணவர்கள் தேர்வானதில் ஒரே பள்ளியைச் சேர்ந்த 3 மாணவர்கள் இந்த பள்ளியில் என்பது தான் குறிப்பிடத்தக்கது. விருது பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைமையாசிரியை ஆசிரிய – ஆசிரியைகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் பாராட்டி வாழ்த்தினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!