17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் ரெட்கிராஸ் நிர்வாகக் குழு கூட்டம்

செங்கம் ரெட்கிராஸ் நிர்வாகக் குழு கூட்டம்

எழுதியவர்: mohan August 11, 2020, 11:46 am

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ரெட்கிராஸ் எம்.சி.எம் நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது.செங்கம் அடுத்த செ.நாச்சிப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த கூட்டத்துக்கு செங்கம் வட்ட ரெட்கிராஸ் தலைவரும் கல்லூரி தலைவருமான அக்ரி.வெங்கடாஜலபதி தலைமை தாங்கினார் ரெட்கிராஸ் செயலாளரும் ஆன்மீக சொற்பொழிவாளருமான தனஞ்செயன் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை ரெட்கிராஸ் தலைவர் பா.இந்திரராஜன் கலந்துக்கொண்டு உறுப்பினர்களுக்கு மாஸ்க் கிருமி நாசினி வழங்கி பேசினார். செங்கம் நாச்சிப்பட்டு கிராமத்தில் 1500 குடும்பங்களுக்கு அரிசு மளிகை பொருட்கள் மற்றும் நோய் தடுப்பு மாத்திரைகள் கபஸ்வர குடிநீர் போன்றவை ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் மூலம் வழங்கப்பட்டதும் ரெட்கிராசுக்கு பெருமை சேர்க்கும் நிகழ்ச்சிகளே ஆகும் செங்கம் ரெட்கிராஸ் மாவட்டத்திலேயே அதிக மதிப்புடைய செயல் திட்டங்களை செய்து முதன்மை இடத்தில் உள்ளது என மாவட்ட தலைவர் இந்திரராஜன் பேசினார். கூட்டத்தில் 2019 முதல் 2020 மார்ச்சு வரையிலான ஒராண்டு வரவு செலவு கணக்கு அங்கீகாரம் ஒராண்டில் செய்யப்பட்ட 20க்கும் மேற்பட்ட நலத்திட்ட பணிகள் கொரானா வைரஸ் கண்டறியப்பட்ட பகுதிகளில் உதவிகள் செய்வது என பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பொருளாளர் ஆதவன் நன்றி கூறினார். கூட்டத்தில் நிர்வாக செயலாளர் சர்தார் ரூகுல்லா செயற்குழு உறுப்பினர்கள் டாக்டர் வெற்றிக்கனி பேராசிரியர் பிரகாஷ் ஆசிரியர் செந்தில் மாவட்ட ஒய்.ஆர்.சி ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!