17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி ஆனந்தா நகரில் பாஜக சார்பில் பூஜைகள் நடைபெற்றது.

உசிலம்பட்டி ஆனந்தா நகரில் பாஜக சார்பில் பூஜைகள் நடைபெற்றது.

எழுதியவர்: mohan August 10, 2020, 7:38 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிட்குட்பட்ட பகுதியான ஆனந்தா நகர் 4வது தெருவில் பாஜக சார்பில் கந்த சஷ்டி பாடல் பாடி வேல் பூஜைகள் நடைபெற்றது. இதில் கந்த சஷ்டியை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தை கண்டித்து பாஜகவினருடன் இணைந்து பொதுமக்களும் பூஜைகள் செய்து கந்தசஷ்டி பாடல் பாடினர்.

மேலும் அனைவரின் வீட்டின் முன்பு வேல் மற்றும் மயில் கோலம் வரைந்து விளக்கேற்றி முருகனை வழிபட்டனர். இந்நிகழ்ச்சி விருதுநகர் பாஜக கிழக்கு மாவட்ட விவசாய அணி தலைவர் ரெங்கராஜா தலைமையில் நடைபெற்றது. மேலும் பாஜக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!