18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே மீனாட்சிபட்டியில் டிப்பர் லாரியில் மின்சாரம் பாய்ந்து டிரைவர் உயிரிழப்பு. உரிய இழப்பீடு வழங்க கோரி மருத்துவமணையை உறவினர்கள் முற்றுகை.

உசிலம்பட்டி அருகே மீனாட்சிபட்டியில் டிப்பர் லாரியில் மின்சாரம் பாய்ந்து டிரைவர் உயிரிழப்பு. உரிய இழப்பீடு வழங்க கோரி மருத்துவமணையை உறவினர்கள் முற்றுகை.

எழுதியவர்: mohan August 9, 2020, 4:30 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வழியாக மதுரை போடி அகல இரயில்பாதைக்காக பாதையை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.  செக்காணூரணி முதல் உசிலம்பட்டி வரை பணிகள் முடிவடைந்த நிலையில்இரயில் பாதைகளில் போடப்பட்டுள்ள மீதி ஜல்லி கற்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மூக்கன் மகன் சுரேஷ்(36).இவர் டிப்பர் லாரியில் மீனாட்சிபட்டியில் ஜல்லிகற்களை ஏற்றிக் கொண்டு அருகிலுள்ள கிராம்பட்டியில் இறக்கும் போது லாரியில் எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது.சுரேஷ் அலறியதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் லாரியில் இருந்து மீட்டு கருமாத்தூர் தனியார் மருத்துவமணைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் மருத்துவமணையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த சுரேஷ்க்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவரது உறவினர்கள் மருத்துவமணையை முற்றுகையிட்டனர். தகவலறிந்த செக்காணூரணி போலீசார் சம்பவஇடத்திற்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களை கலைந்து போகச் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மின்சாரம் தாக்கி இறந்தசுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதணைக்கு உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து செக்காணூரணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!