18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை அருகே ஒர்க் ஷாப் தீப்பிடித்து இளைஞர் கருகி சாவு.

மதுரை அருகே ஒர்க் ஷாப் தீப்பிடித்து இளைஞர் கருகி சாவு.

எழுதியவர்: mohan August 6, 2020, 1:33 pm

மதுரை அருகே கார் ஒர்க் ஷாப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் அதன் உரிமையாளர் தீயில் கருகி பலியானார்.மதுரை சங்கீத் நகரில் வசித்தவர் உதயக்குமார். வயது 35. இவர் , சிக்கந்தர்சாவடி அருகே இளங்கோ நகரில் கார் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வந்தார்.இந்த நிலையில் புதன்கிழமை இரவு, உதயக்குமார் பணிகளை முடித்து விட்டு, கடையின் உள்புறத்தில் தாழிட்டு தூங்கிக் கொண்டிருந்தராம். அப்போது ஏற்பட்ட தீவிபத்தில் அவர் உடல் கருகிய நிலையில் அங்கேயே உயிரிழந்தார்.இறந்தவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி கார்த்தீகா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளன.இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்து அலங்காநல்லூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி, மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!