18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் அறவழி ஆர்ப்பாட்டம்…

நெல்லையில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் அறவழி ஆர்ப்பாட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் August 5, 2020, 10:46 pm

பாபரி மஸ்ஜித் இடத்தில் ராமர் கோயில் கட்டும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் இன்று (05/08/2020) தழுவிய அளவில் சமூக இடைவெளியுடன் அறவழி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

▪️பாபரி மஸ்ஜித் இடத்தில் ராமர் கோயில் கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும்.

▪️காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை வழங்க வேண்டும்.

▪️முத்தலாக் தடைச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும்.

▪️பொருளாதார பேரழிவை கொரோனாவால் மறைக்காமல் நல்ல நிர்வாகத்தை வழங்கிட வேண்டும்.

என்ற நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மேலப்பாளையத்தில் மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.ஏ.கனி தலைமையில் அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினார். சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!