17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » கீழக்கரை சட்டப்போராளிகளின் ஜல்லிக்கட்டுகான சட்டப்போராட்டம்.. இந்திய ஜனாதிபதிக்கு கோரிக்கை..

கீழக்கரை சட்டப்போராளிகளின் ஜல்லிக்கட்டுகான சட்டப்போராட்டம்.. இந்திய ஜனாதிபதிக்கு கோரிக்கை..

எழுதியவர்: keelai January 20, 2017, 3:50 pm

பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழர்களின் அழகிய பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை காக்கும் விதமாகவும், வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கான தடையை உடனடியாக நீக்க வலியுறுத்தியும் கீழக்கரை சட்டப் போராளிகள் வாட்ஸ் ஆப் குழுமம் சார்பாக மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் முயற்சியில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி , பாரத பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி திராத் சிங் தாகூர் ஆகியோர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில் தமிழர்களின் தொன்மையான கலாச்சாரத்தையும், வீர விளையாட்டான ஜல்லிக்கட்டின் சிறப்பையும் தெளிவுபடுத்தியதோடு, கலாச்சாரத்தை உறுதிப்படுத்தும் இந்திய அரசியலமைப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளை சுட்டிக் காட்டி ஜல்லிக்கட்டுக்கான தடையை உடனடியாக நீக்க வலியுறுத்தப்பட்டுள்ளது

இது போன்ற மனுக்களை நம் கீழக்கரை நகரில் இருக்கும் பொதுநல அமைப்பினரும், சமுதாய சங்கங்களும், சமூக அக்கறை கொண்டவர்களும் அனுப்பி நம்மளவில் முயற்சி மேற்கொண்டால் வெற்றி நிச்சயம்.

தடை அதை உடை ஒரு சரித்திரம் படை

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!