17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே அன்னம்பார்பட்டியில் குறி சொல்லும் மக்களிடம் குறைகளை கேட்டறிந்த வருவாய் கோட்டாட்சியர்.

உசிலம்பட்டி அருகே அன்னம்பார்பட்டியில் குறி சொல்லும் மக்களிடம் குறைகளை கேட்டறிந்த வருவாய் கோட்டாட்சியர்.

எழுதியவர்: mohan August 4, 2020, 1:36 pm

தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் ஒரு சில தளர்வுகளுடன் பொது முடக்கம் அமலில் உள்ளநிலையில் பொதுமக்கள் வேலையிழந்து வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.மதுரை உசிலம்பட்டி அருகே சீமாணுத்து பஞ்சாயத்திற்குட்பட்ட அன்னம்பார்பட்டியில் குறி சொல்லும் மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அன்றாட பிழைப்புக்கு ஏதாவது கிராமத்தை தேர்வு செய்து சாமத்தில் குறி சொல்லி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.

தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவால் சிரம்பட்டு வருவதாக உசிலம்பட்டி கோட்டாட்சியர் ராஜ்குமாரிடம் அந்த பகுதி ஊராட்சி மன்ற தலைவர் அஜித்பாண்டி கோரிக்கை மனு அளித்திருந்தார்.அதன்பேரில் அங்கு சென்ற கோட்டாட்சியர் அந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் அந்த மக்களுக்கு தன்னுடைய சொந்த செலவில் நிவாரண பொருட்கள் வழங்குவதாகவும், அரசிடம் வலியுறுத்தி மாத ஊதியம் பெற்று தரவும், அவர்களின் பிள்ளைகள் படிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதில் சீமாணுத்து ஊராட்சி தலைவர் அஜித்பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!