17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அன்னம்பார்பட்டியில் சாக்கடை கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஆர்டிஓ நேரில் ஆய்வு செய்து அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு.

அன்னம்பார்பட்டியில் சாக்கடை கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஆர்டிஓ நேரில் ஆய்வு செய்து அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு.

எழுதியவர்: mohan August 4, 2020, 1:04 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமாணுத்து பஞ்சாயத்திற்குட்பட்ட அன்னம்பார்பட்டியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் தேங்கும் சாக்கடை நீர் கால்வாய் வழியாக செல்லும். தற்போது கால்வயை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்றதால் சாக்கடை நீர் செல்ல வழியில்லாமல் தேங்கி வருகிறது.

தற்போது மழை காலம் என்பதால் சாக்கடை நீரில் டெங்கு கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகுவதாக அந்த பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் அஜித்பாண்டியிடம் தெரிவித்தனர். ஆக்கிரமிப்புக்கள் அகற்று வலியுறுத்தி ஆர்டிஓ ராஜ்குமாரிடம் ஊராட்சி மன்ற தலைவர் மனு அளித்திருந்தார். அதன்பேரில் ஆர்டிஓ ஆக்கிரமிப்புகள் உள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாக்கடை கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!