17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேதகு அப்துல்கலாம் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக மாபெரும் இணையவழி பேச்சுப்போட்டி:

மேதகு அப்துல்கலாம் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக மாபெரும் இணையவழி பேச்சுப்போட்டி:

எழுதியவர்: mohan August 3, 2020, 2:05 pm

மேதகு அப்துல்கலாம் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக மாபெரும் இணையவழி பேச்சுப்போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றது.தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து 140 போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்களது பேச்சு திறனை காணொளிகள் மூலம் அனுப்பி வைத்தனர்.இந்த இணைய வழி பேச்சுப் போட்டியில் பள்ளி , கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களது திறனை வெளிப்படுத்தினார்கள். பங்கு பெற்ற அனைவருக்கும் மின் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.பள்ளி மாணவர்கள் சென்னை ஈஷா , சிவகங்கை சாய்குரு, பெரம்பலூர் லத்திகா, தூத்துக்குடி வசந்தகுமாரி,தீபக், அண்டக்குடி பட்டி இனியா, திருவள்ளூர் கீர்த்தனா, காரைக்குடி ஆஷா, இராமநாதபுரம் நிலோஃபர் நிஷா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.கல்லூரி மாணவர்கள் ஈரோடு யோகலஷ்மி, கோவை சாக்ரடீஸ், கிருஷ்ணகிரி சந்தோஷ்குமார், சேலம் தங்கமுத்து ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இளைஞர்கள் மதுரை நூருல்லாஹ், திருவாரூர் தேன் மொழி, சேலம் குறள்கோ,பங்கயம் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கலாம் மாணவர் விருதும், இளைஞர்களுக்கு தமிழ்ச்சுடர் விருதுகளும் வழங்கப்பட இருக்கிறது.பேச்சுப் போட்டியின் நடுவர்களாக முனைவர் சந்திரன், மாநில தமிழுக்கும் அமுதென்று பேர் திட்ட பொறுப்பாளர் வெற்றிச்செல்வி ஆகியோர் செயல்பட்டனர்.பேச்சுப் போட்டிக்கான ஏற்பாடுகளை இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை தமிழுக்கும் அமுதென்று பேர் திட்ட பொறுப்பாளர் மூவிந்தராஜ், இராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இராவணன் குமார், நூருல் அமீன், சரவணக்குமார்,கிளாட்வின் ஆகியோர் செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!