ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே சோழந்தூரைச்
சேர்ந்த மலையாண்டி மனைவி பந்தானம், 85. இதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் தம்பிராஜ், 32. குடி போதையில் இருந்த தம்பிராஜ், பந்தானத்தை சற்று முன் திடீரென தாக்கியதாக கூறப்படுகிறது.இதில் பந்தானம் தலையில் காயம் ஏற்பட்டது. அவரது உறவினர்கள் பந்தானத்தை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர்.மருத்துவர்கள் பரிசோதனைக்கு பின் இடது கை எலும்பு முறிவு, தலைக்காயத்திற்கு சிகிச்சை அளித்தனர். தாக்குதலுக்கான காரணம் குறித்து திருப்பாலைக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்
மூதாட்டியை தாக்கிய போதை வாலிபர்
எழுதியவர்: mohan August 1, 2020, 12:24 pm




You must be logged in to post a comment.