17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கல்வி » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » போட்டோ கேலரி » தனித்திறன் போட்டிகளில் இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் பரிசுகளை வென்றனர்…

தனித்திறன் போட்டிகளில் இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் பரிசுகளை வென்றனர்…

எழுதியவர்: ஆசிரியர் September 10, 2017, 8:33 pm

இராமநாதபுரம் தமிழ் சங்கம் சார்பாக மகாகவி பாரதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இவ்விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல வகையான தனித்திறன் போட்டிகள் நடைபெற்றது. இந்நினைவு விழாவில் பல ஊர்களில் இருந்து பல பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டிகளில் பங்கெடுத்த கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் மாறுவேட போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை வென்றனர். பரிசுகளை வென்ற கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவர்களை பள்ளி நிர்வாகம் மற்றும் சக மாணவர்கள் பாராட்டினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!