17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இலவச முக கவசத்திலும் ஊழல் டாக்டர். சரவணன் எம்எல்ஏ குற்றச்சாட்டு!

இலவச முக கவசத்திலும் ஊழல் டாக்டர். சரவணன் எம்எல்ஏ குற்றச்சாட்டு!

எழுதியவர்: Askar July 30, 2020, 11:38 pm

இலவச முக கவசத்திலும் ஊழல் டாக்டர். சரவணன் எம்எல்ஏ குற்றச்சாட்டு!

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.,வுமான சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழகத்தில் கொரோனா இறப்பு தொடர்பாக அரசும், அமைச்சர்களும் கொடுக்கும் புள்ளிவிவரங்களில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. அரசு இறப்பு விகிதத்தை மறைக்கிறது. கொரோனாவிலிருந்து பொதுமக்களை காக்கும் நடவடிக்கையாக பொதுமக்களுக்கு இலவசமாக முககவசம் தரவேண்டும் என முதலில் தி.மு.க., வலியுறுத்தியது. ஆனால் அப்போது கண்டுகொள்ளாத அ.தி.மு.க., அரசு தற்போது முகக்கவசம் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த முக கவசம் வழங்குவதிலும்  பல கோடி ரூபாய் ஊழல் நடக்கிறது. முக கவசத்தை ரேஷன் கார்டு வாயிலாக அனைத்து மக்களுக்கும் வழங்க வேண்டும். அப்போதுதான் நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும் என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!