18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி பள்ளியில் சத்துணவு சாப்பிடும் பள்ளிக் குழந்தைகளுக்கு உலர் இணை உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி பள்ளியில் சத்துணவு சாப்பிடும் பள்ளிக் குழந்தைகளுக்கு உலர் இணை உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

எழுதியவர்: mohan July 29, 2020, 1:22 pm

உலகத்தையே அச்சுநுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருவதால் அரசு பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.இதனால் அரசுப்பள்ளிகள் மூட்ப்பட்டுள்ளதால் மதியம் சத்துணவு சாப்பாடு கிடைக்காமல் கிராமப்புற மாணவ மாணவிகள் அவதிப்பட்டனர்.இதனைத் தவிர்க்க அரசுப்பள்ளிகளில் சத்துணவு பெறும் பள்ளிக்குழந்தைகளுக்கு அரிசி பருப்பு போன்ற உலர் இணை உணவுப் பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளான நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் தலைமையில் உலர் இணை உணவுப் பொருட்களை பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்களிடம் வழங்கினர்.இதில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு பெற்றோர்கள் பொருட்களை வாங்கிச் சென்றனர். அப்போது, பொதுமக்கள் மாணவர்கள் பெற்றோர்கள் நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பது குறித்தும், முக கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் பள்ளி தலைமைஆசிரியர் மதன்பிரபு பெற்றோர்களிடம் விளக்கிக் கூறினார்..

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!