18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பத்தூர் அருகே மலைப்பாம்பின் பிடியில் சிக்கிய புள்ளிமான் உயிரிழந்தது…

திருப்பத்தூர் அருகே மலைப்பாம்பின் பிடியில் சிக்கிய புள்ளிமான் உயிரிழந்தது…

எழுதியவர்: ஆசிரியர் July 28, 2020, 9:41 pm

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே காரைக்குடி சாலையில் தனியார் அறக்கட்டளைக்கான தோட்டம் உள்ளது. அதில் ஏராளமான புள்ளிமான்கள், மலைப்பாம்புகள் உள்ளிட்ட வன உயிரினங்கள் உள்ளன.

இப்பகுதியில் புள்ளிமான்கள் ரோட்டை கடக்கும் போது வாகனங்களில் அவ்வப்போது அடிபடுகிறது. இந்நிலையில் தனியார் தோட்ட காவலர் புள்ளிமான் கதறல் சப்தம் கேட்டு பார்த்த போது புள்ளி மான்குட்டி ஒன்றை மாலைப்பாம்பு பிடித்து இருப்பதை பார்த்து காப்பாற்ற முயன்றார்.

இதனையடுத்து திருப்பத்தூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மானைமலைப்பாம்பிடம் இருந்து புள்ளிமானை பிரித்தனர். இருப்பினும் மலைப்பாம்பின் இறுகிய பிடியால் புள்ளிமான் இறந்து விட்டது. இறந்த 9 மாத குட்டி புள்ளிமானை வனத்துறையினர் தீ வைத்து எரித்தனர். பிடிபட்ட மலைப்பாம்பை பிரான்மலைக் காட்டில் விட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!