18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் திமுக பிரமுகர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு. எட்டு வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன

மதுரையில் திமுக பிரமுகர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு. எட்டு வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன

எழுதியவர்: mohan July 28, 2020, 11:44 am

மதுரை கீரைத்துறை வாழைத்தோப்பு பகுதியில் உள்ள திமுக பிரமுகர் வீட்டின் பெட்ரோல் வீசிய மர்மக் கும்பல், வீட்டின் முன்பு இருந்த எட்டு வாகனங்களையும் அடித்து நொறுக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர்.மதுரை கீரைத்துறையில் வசிப்பவர் வி.கே. குருசாமி, திமுக பிரமுகருமான இவர் முன்னாள் மண்டலத் தலைவராக மதுரை மாநகராட்சியில் பணியாற்றியுள்ளார்.

அதிகாலை இரண்டு டுவீலர்களில் நான்கு பேர் வந்து, குருசாமி வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு, வீட்டு முன்பாக இருந்த வேன், டூவிலர்கள் உள்பட எட்டு வாகனங்களை தாக்கி உடைத்து விட்டு தப்பியோடியுள்ளனர்.இதில் அதிஷ்டவசமாக வீட்டில் இருந்த அனைவரும் உயிர் தப்பினர்.இது குறித்து கீரைத்துறை போலீஸார் விசாரிக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!