18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை அலுவலர்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை அலுவலர்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan July 28, 2020, 11:08 am

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மற்றும் தமிழ்நாடு வருவாய்த்துறை குரூப்-2 நேரடி நியமன அலுவலர் சங்கம் மதுரை மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் கல்யாண சுந்தரம் தலைமையில் மாவட்ட செயலாளர் மணிகண்டபிரபு பொதுச்செயலாளர்கள் சுருளி ராஜ் தர்ம ராஜ் ஆகியோர் முன்னிலையில்,வருவாய்த்துறை அலுவலர்கள் 50க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளி கடைப்பிடித்து முக கவசம் அணிந்து துணை வட்டாட்சியர் பதவி உயர்வு தொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையரின் தெளிவுரை யை மதிக்கவேண்டும் 25க்கும் மேற்பட்ட துணை வட்டாட்சியர் பணியிடம் காலியாக உள்ள போதும் இரண்டு ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்குதல் மருமம் என்ன என்பதை பற்றியும் பேரிடர் மீட்பு துறையில் பணியாற்றும் எங்களுக்கு எப்போது விடிவுகாலம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!