17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் சொத்து தகராறில் மாமியாரை மருமகனே அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உசிலம்பட்டியில் சொத்து தகராறில் மாமியாரை மருமகனே அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

எழுதியவர்: mohan July 27, 2020, 6:43 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ரயில்வே பீட்டர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மாயக்கிருஷ்ணன் மனைவி முத்துலெட்சுமி, இவருடைய கணவர் கடந்த 15 வருடங்களுக்கு விபத்தில் இறந்து விட்ட நிலையில் இவருக்கு பிரியதர்ஷினி என்ற ஒரே ஒரு மகள் உள்ளார்.இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமங்கலம் அருகே உள்ள கூத்தியார்குண்டு கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த்குமார் என்பவரை பிரியதர்ஷினி காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.திருமணத்திற்கு பின் பிரியதர்ஷினியை தனது தாயார் வீட்டிற்கு சென்று சொத்தில் பாதியை எழுதி வாங்கி வருமாறு பிரசாந்த்குமார் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு வழக்கம் போல் சொத்தைக் கேட்டு பிரசாந்த்குமார் தகராறில் ஈடுபட்ட போது அவரை சமாதாம் செய்ய முத்துலெட்சுமி கூத்தியார்குண்டு கிராமத்தில் உள்ள தனது மருமகனின் வீட்டிற்கு சென்ற போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் மருமகன் பிரசாந்த்குமார் மாமியார் முத்துலெட்சுமியை பலமாக தாக்கியதில் கடந்த மூன்று தினங்களாக சிகிச்சை பெற்று வந்த முத்துலெட்சுமி இன்று அவரது வீட்டில் பரிதாபமாக உயிரிழந்தாக கூறப்படுகிறது. சம்பவமறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பிரசாந்த்குமாரை தேடி வருகின்றனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!