18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை ரோட்டரி சங்கம் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா….

கீழக்கரை ரோட்டரி சங்கம் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா….

எழுதியவர்: ஆசிரியர் July 27, 2020, 2:50 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் (2020-21)புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அரசாங்கத்தின் விதிமுறையின் படி நடைபெற்றது.

ரோட்டரி சங்கத்தின் பட்டயத்தலைவர் டாக்டர் அலாவுதீன் முன்னிலையில் முன்னாள் ஆளுநர் டாக்டர் சின்னதுரை அப்துல்லா புதிய நிர்வாகிகள்  தலைவராக மூர் ஹசனுதீனும், செயலாளராக எபன் பிரவீன் குமாரும் மற்றும் நிர்வாகிகளை  பதவி பிரமாணம் செய்து வைத்து சிறப்புரையாற்றினார். துணை ஆளுநர் டாக்டர் பாலசந்திரன் புதிய உறுப்பினரை அறிமுகம் செய்து வைத்தார்கள்.சிறப்பு அழைப்பாளாராக ராமநாதபுரம் ரோட்டரி சங்கத்தின் பட்டயத்தலைவர் ரவிசந்திர ராமவண்ணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.துணை ஆளுநர் காந்தி, முன்னாள் துணை ஆளுநர் சே.பா.ரங்கநாதன் கலந்துகொண்டனர்.

மாவட்ட அளவில் பன்னிரன்டாம் வகுப்பு சிபிஎஸ்இ பாடதிட்டத்தில் முதலாமிடம பெற்ற கீழக்கரையை சார்ந்த மாணவர் பயாஸ் கௌரவிக்கப்பட்டார்.  பின்பு முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இவ்விழாவில் சங்கத்தின் பொருளாளர், முன்னாள் தலைவர்கள்,முன்னாள் செயலாளர்கள், சங்க உறுப்பினர்கள் கலந்துகெண்டனர்.

கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!