18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் தனியார் பைனான்ஸ் ஊழியர்களை முற்றுகையிட்ட சுய உதவிக் பெண்கள். போலீசார் சமரசம்

நிலக்கோட்டையில் தனியார் பைனான்ஸ் ஊழியர்களை முற்றுகையிட்ட சுய உதவிக் பெண்கள். போலீசார் சமரசம்

எழுதியவர்: mohan July 27, 2020, 12:36 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் சில மகளிர் சுய உதவிக் குழுக்கள் சில தனியார் நிறுவனங்களிடம் சுய உதவிக் குழுக்கள் மூலமாக தவணை முறையில் செலுத்தக்கூடிய கடன் பெற்று வாரம்தோறும் சரியாக பணம் செலுத்தி வந்தனர்.இந்நிலையில் கடந்த 5 மாதங்களாக உலகம் முழுக்க கொரானா வைரஸ் தொற்று நோய் காரணமாக ஊரடங்கு மற்றும் வேலை வாய்ப்பை இழந்து வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் இந்தப் பைனான்ஸ் நிறுவன வீட்டிற்கு வந்து ஐந்து மாத நிலுவை தொகையும் அதுவும் வட்டியுடன் கூடிய உடனே கட்ட வேண்டும் என்றும் இல்லையென்றால் கூட்டுவட்டி போடுவோம் என்றும் மகளிர் குழுவினரிடம் கூறினார்கள். இதற்கு அப்பகுதி மகளிர் குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து உடனடியாக முற்றுகையிட்டு மாதந்தோறும் வாரம்தோறும் கட்டக்கூடிய தொகையை அடுத்த மாதத்திலிருந்து சரியாக செலுத்துகிறோம்.

அதுவரைக்கும் எந்த விதமான வட்டியும் எந்தவிதமான கூட்டுவட்டிக்கும் போடக்கூடாது என முற்றுகையிட்டு கோசங்கள் எழுப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சகாயராஜ் நேரில் வந்து மகளிர் குழுவில் இடம் சமரசம் பேசி முறையாக அடுத்த மாதத்திலிருந்து செலுத்த வாய்ப்பு இருக்கிறது வருவாய்கள் இதை கட்டாயப்படுத்தக்கூடாது இது சம்பந்தமாக அரசு உத்தரவிட்டுள்ளது என கூறி சமரசம் செய்து அனுப்பி வைத்தார். இதனைத் தொடர்ந்து அந்தப் மகளிர் குழுவினர் கலைந்து சென்றனர் இதனால் சற்று நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!