17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை நியாய விலை கடைகளில் பச்சரிசி வழங்காததால் பொதுமக்கள் அவதி..

கீழக்கரை நியாய விலை கடைகளில் பச்சரிசி வழங்காததால் பொதுமக்கள் அவதி..

எழுதியவர்: ஆசிரியர் July 26, 2020, 5:37 pm

கீழக்கரை நகராட்சி பகுதியில் சுமார் ஒன்பது நியாய விலை கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் அரசின் நியாய விலை பொருள்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த மாதம் கடைசி தேதி ஆகியும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி வழங்கப்படாததால் பொதுமக்கள் குறிப்பாக ஏழை மக்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றார்கள்.

இது சம்பந்தமாக பழைய குத்பா பள்ளி தெருவைச்சேர்ந்த முகம்மது இஸ்மாயில் கூறுகையில் தற்போது கொரோனா தொற்று பிரச்சினையில் பொதுமக்கள் பாதிப்படைந்து வரும் நிலையில் கீழக்கரையில் இருக்கும் நியாய விலை கடைகளில் மாத கடைசி ஆகியும் பச்சரிசி வழங்காமல் இருப்பதால் மேலும் பாதிப்படைந்து இருக்கின்றார்கள். நியாய விலை கடைகளில் வழங்கப்படும் பச்சரிசியை பெற்று தான் குடும்ப அட்டைதாரர்கள் இடியாப்பம்,ஆப்பம் மற்றும் புட்டு போன்ற உணவு பொருள்களை தயார் செய்து சாப்பிடுகின்றார்கள். தற்போது நியாய விலை கடைகளில் பச்சரிசி வழங்காமல் இருப்பதால் இதை நம்பி இருக்கும் ஏழை மக்கள் பாதிப்படைந்து இருக்கின்றார்கள். எனவே!மாவட்ட ஆட்சியர்,மாவட்ட வட்ட வழங்கல் துறையினர் கீழக்கரை நியாய விலை கடைகளுக்கு உடனடியாக பச்சரிசி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!