17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மண்டபம், கடலாடி ஒன்றிய திமுக., பொறுப்பு குழு நிர்வாகிகள் நியமனம்

மண்டபம், கடலாடி ஒன்றிய திமுக., பொறுப்பு குழு நிர்வாகிகள் நியமனம்

எழுதியவர்: mohan July 26, 2020, 5:15 pm

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கிழக்கு ஒன்றிய திமுக., பொறுப்பாளர் பதவி கடந்த 6 மாதங்களாக காலியாக இருந்தது. இந்நிலையில் மண்டபம் ஊராட்சி ஒன்றிய வேதாளை கவுன்சிலர் தௌபீக் அலியை , மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலராக திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் நியமனம் செய்தார். பொறுப்பு குழு உறுப்பினர்களாக செள. நிலோபர் கான், ச.சுல்தான் இப்ராஹிம், பா.பால் தாமஸ், மு.சந்திரமோகன், சி.பேரின்பம், ம.கோவிந்த மூர்த்தி, ரா.சேதுராஜா, மு.உஷா லட்சுமி, பா.ரவிச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடலாடி ஒன்றிய செயலராக இருந்த ராஜசேகரை விடுவித்து பொறுப்பாளராக ஆப்பனூர் மு.ஆறுமுக வேல் என்பவரை திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும் பொறுப்புக்குழு உறுப்பினர்களாக பி.போகர் துரைச்சிங்கம், வழக்கறிஞர்கள் எஸ்.அரிச்சந்திரன், எஸ்.முனியசாமி, ஏ.மயில் வேல், கா.அமாவாசி, மா.மாயகிருஷ்ணன், பரக்கத் ஆயிஷா சைபுதீன், ஆர்.கருப்பசாமி, ம.ராஜசேகர பாண்டியன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!