17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பழங்குடியின மக்களுக்கு , எம்.எல்.ஏ. நிவாரண உதவிகள் வழங்கல்…

பழங்குடியின மக்களுக்கு , எம்.எல்.ஏ. நிவாரண உதவிகள் வழங்கல்…

எழுதியவர்: mohan July 26, 2020, 5:06 pm

வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ.,மனோகரன் பழங்குடியின மக்களுக்கு அரிசி, காய்கறிகள் மற்றும் முககவசங்களை வழங்கினார்.தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பேரூர் பகுதிக்குட்பட்ட 18வது வார்டைச் சேர்ந்த தலையணை பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு அரிசி,காய்கறிகள் மற்றும் முககவசங்களை அதிமுக இளைஞரணி இணை செயலாளரும், வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ.,வுமான மனோகரன் வழங்கினார்.சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர்.மூர்த்தி பாண்டியன், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் சாமிவேல், ஒன்றிய அவைத்தலைவர் முகம்மது உசேன், நகர அவைத்தலைவர் நீராவி, நகர பொருளாளர் திவான் மைதீன், இராயகிரி நகர செயலாளர் சேவகப்பாண்டியன், மாவட்ட விவசாய அணி துணைச்செயலாளர் மாங்கனி முருகையா, மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் மூர்த்தி, முன்னாள் மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் சசிக்குமார், முருகையா பாண்டியன், தகவல் நுட்பஅணி நிர்வாகிகள் மாரியப்பன், தனபால், சிவக்குமார், பாதுஷா, இதயக்கனி முத்துராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் வாசுதேவநல்லூர் பேரூர் செயலாளர் சீமான் மணிகண்டன் நன்றி கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!