17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை அருகே மழை நீரும் சாக்கடை நீரும் குடிநீரும் ஒன்றாக கலப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம்

நிலக்கோட்டை அருகே மழை நீரும் சாக்கடை நீரும் குடிநீரும் ஒன்றாக கலப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம்

எழுதியவர்: mohan July 25, 2020, 12:43 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குல்லலக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட கல்லடிப் பட்டி கிராமத்திலுள்ள நடுத்தெருவில் போடப்பட்ட சாலை மிகவும் பள்ளமாக அமைக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக மழை பெய்தால் தண்ணீர் இந்த சாலையில் தேங்கி விடுகிறது. இதனால் குடிநீர் பைப்பில் மழை நீரும் சாக்கடை நீரும் கலந்து குடிநீருக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த குடிநீரை சுமார் 100க்கும் மேற்பட்ட உங்கள் பிடித்து குடித்து வருவதால் தொற்றுநோய் பரவும் நிலை உள்ளது என ஊராட்சி மன்றத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததால் இப்பகுதி பொதுமக்கள் ஒன்றாகத் திரண்டு நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவிப்பு செய்துள்ளார்கள்.எனவே உடனடியாக இது சம்பந்தமாக ஊராட்சி நிர்வாகமும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

. நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!