18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நான்கு மாதங்களாக சீரமைப்பு செய்யப்படாத கால்வாய் பள்ளங்கள்….மெத்தன போக்கில் கீழக்கரை நகராட்சி அதிகாரிகள்…

நான்கு மாதங்களாக சீரமைப்பு செய்யப்படாத கால்வாய் பள்ளங்கள்….மெத்தன போக்கில் கீழக்கரை நகராட்சி அதிகாரிகள்…

எழுதியவர்: ஆசிரியர் July 25, 2020, 11:35 am

கீழக்கரை வடக்குத்தெரு தைக்கா அருகில் பிரதான சாலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் கழிவு நீர் அடைப்பு ஏற்பட்டு இந்த பகுதியில் இருக்கும் கழிவு நீர் அடைப்பை சீரமைப்பு செய்ய இந்த இடத்தில் நான்கு மாதங்களுக்கு முன் கீழக்கரை நகராட்சி ஊழியர்களால் பள்ளங்கள் தோண்டப்பட்டது. இந்த பள்ளங்கள் இது வரை சீரமைப்பு செய்யப்படாமல் இருப்பதால் அடிக்கடி இந்த பள்ளங்களில் இருந்து கழிவு நீர் வழிந்து ஓடி இந்த பகுதி சுகாதார இன்றி காணப்படுகின்றது.

இந்த பள்ளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் நான்கு சக்கர வாகனம் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த செய்தி கீழை நியூஸ் மற்றும் பல ஊடகங்களில் வெளியிடப்பட்டும் கீழக்கரை நகராட்சி அதிகாரிகள் இது வரை இந்த பள்ளத்தை சீரமைப்பு செய்ய முன் வரவில்லை.

இது சம்பந்தமாக மக்கள் நல பாதுகாப்புக்கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம் கூறுகையில், “இந்த இடத்தை சீரமைப்பு செய்ய பல முறை கீழக்கரை நகராட்சி கவனத்திற்கு கொண்டு சென்றும் இது வரை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இது சம்பந்தமாக புகைப்பட ஆதாரத்தோடு தமிழக நகராட்சி இயக்குனர், தமிழக நகராட்சி மண்டல இயக்குனர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கவனத்திற்கு கொண்டு செல்வோம்” என்றார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!