18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் கொரோனா தடுப்பு ஆலோசனைக்கூட்டம்- இஸ்லாமிய அமைப்புகள் அரசியல் கட்சிகள் பங்கேற்பு…

நெல்லையில் கொரோனா தடுப்பு ஆலோசனைக்கூட்டம்- இஸ்லாமிய அமைப்புகள் அரசியல் கட்சிகள் பங்கேற்பு…

எழுதியவர்: mohan July 25, 2020, 11:21 am

திருநெல்வேலி மற்றும் புறநகர் பகுதிகளில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில்,கொரோனா தொற்றை தடுப்பது குறித்த ஆலோசனைக்கூட்டம் நெல்லையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு முறைகளை கையாள்வது குறித்தும், ஆய்வு செய்யவும், பாதிப்பு ஏற்பட்டு வருபவர்களை உரிய மருத்துவ சிகிச்சைகளுக்கு உட்படுத்திட ஆவன செய்வது குறித்தும் முடிவெடுக்கப்பட்டது.மேலும், கொரோனா தொற்று ஏற்பட்டு சளி, மூச்சுத்திணறல் முதலான பல்வேறு பிரச்சனைகளை எதிர் கொண்டு பிரச்சினை தீவிரமாகும் நிலையில், அவ்வாறு இன்னல் படுகின்ற நோயாளிகளை இனம் கண்டு உரிய மருத்துவ உதவிகள், சுவாசக்கருவிகள், ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்பாடுகள் செய்யவும் முடிவுகள் செய்யப்பட்டன.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மௌலானா மௌலவி PA காஜா முகைதீன் பாகவி ஹஜ்ரத், மனிதநேய மக்கள் கட்சி நெல்லை மாவட்ட தலைவர் ks.ரசூல் மைதீன், திருநெல்வேலி மாவட்டத்தின் மூத்த மருத்துவர் பேராசிரியர் டாக்டர் அபுல்காசிம், டாக்டர் அபு அபூபக்கர்,டாக்டர் செய்யது இப்ராஹிம், மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா மகளிர் கல்லூரி தலைவர் இன்ஜினியர் SK செய்யது அகமது, பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி முதல்வர் டாக்டர் முகமது சாதிக், மதிமுக மாவட்டச் செயலாளர் KMA.நிஜாம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் LKS. மீரான் முகைதீன் அவர்கள், SDPI மாவட்ட துணைத்தலைவர் KS சாகுல் ஹமீது உஸ்மானி, அதிமுக பகுதி கழக செயலாளர் SS. ஹயாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!