17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனோ பொதுமுடக்கம் காரணமாக பணி வாய்ப்பு இல்லாததால் முகக்கவசம் விற்பனை செய்து வரும் கார் ஓட்டுநர்.

கொரோனோ பொதுமுடக்கம் காரணமாக பணி வாய்ப்பு இல்லாததால் முகக்கவசம் விற்பனை செய்து வரும் கார் ஓட்டுநர்.

எழுதியவர்: mohan July 24, 2020, 6:14 pm

மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த சகாயராஜ் கடந்த 19 ஆண்டுகளாக கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கொரோனோ பொது முடக்கம் காரணமாக வாடகை கார் இயக்கும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டதால் குடும்ப வறுமையை போக்க கார் ஓட்டுனர் சகாயராஜ் தற்பொழுது முகக்கவசம் (face sheld) விற்பனை செய்து வருகிறார். மதுரையில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பல்வேறு பகுதிகளில் தனது காரில் சென்று முகக்கவசம் விற்பனை செய்து அதில் கிடைக்கும் 200 முதல் 300 ரூபாய் வருமானத்தை கொண்டு குடும்ப செலவுகளை சமாளித்து வருகிறார். சொந்தமாக கார் வாங்கியுள்ள நிலையில் காருக்கான கடனை செலுத்த வருமானம் இதன்மூலம் கிடைக்கவில்லை என்றாலும் தற்போதைக்கு குடும்ப வறுமையை போக்க இதன் மூலம் கிடைக்கும் வருவாய் போதுமானதாக உள்ளதாக நம்பிக்கை தெரிவிக்கிறார் கார் ஓட்டுநர் சகாயராஜ்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!