17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திமுக செயற்குழு உறுப்பினர் வெட்டிக்கொலை

திமுக செயற்குழு உறுப்பினர் வெட்டிக்கொலை

எழுதியவர்: mohan July 24, 2020, 11:05 am

மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடி, துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் பாபு 45 திமுக செயற்குழு உறுப்பினரான இவர் மீது நல்லாசிரியர் நீலகண்டன் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு கடைவீதிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது வீட்டின் அருகே உள்ள குளக்கரையில் மறைந்திருந்த மர்ம கும்பல் பாபுவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது. இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.தகவலறிந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா ஐ.பி.எஸ். சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளார். பிரபல ரவுடி பாபு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரா. யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!