17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அமைச்சர் ஆர் பி உதயகுமார் தொகுதியில் உரிய அனுமதியின்றி மணல் அள்ளிய டாரஸ் லாரிகள் பொக்லைன் இயந்திரம் பறிமுதல்

அமைச்சர் ஆர் பி உதயகுமார் தொகுதியில் உரிய அனுமதியின்றி மணல் அள்ளிய டாரஸ் லாரிகள் பொக்லைன் இயந்திரம் பறிமுதல்

எழுதியவர்: mohan July 24, 2020, 10:59 am

திருமங்கலம் அருகே உரிய அனுமதியின்றி ஆற்று பகுதியிலும் கண்மாய் பகுதியிலும் மணல் அள்ளிய 10 டாரஸ் லாரிகள், பொக்லைன் இயந்திரத்தையும் பறிமுதல் செய்து திருமங்கலம் டிஎஸ்பி நடவடிக்கை எடுத்துள்ளார் தொடர்ந்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி தாலுகா வேப்பங்குளம் குராயூர் சாலையில் ஆற்றுப் பகுதியில் மணல்,கண்மாயில் சவ்வூடுமண் அள்ளுவதாக மதுரை மாவட்ட எஸ்பி அஜித்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இடத்தை மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில் திருமங்கலம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு அதிகாரி) சம்பந்தப்பட்ட பகுதிகளில் ரோந்து சென்றபோது பத்துக்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் மற்றும் சவ்வுடு மண் அள்ளுவது தெரியவந்தது இதனை அடுத்து டிஎஸ்பி தலைமையிலான கள்ளிக்குடி காவல் நிலைய போலீசார் மணல் அள்ளிய கும்பலை கைது செய்து மணல் அள்ள பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தையும் மண் ஏற்றி நின்றிருந்த 10 டாரஸ் லாரிகளையும் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர். தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தொகுதியிலேயே உரிய அனுமதியின்றி மணல் கொள்ளை நடைபெற்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

 செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!