17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் அடுத்த புதுப்பாளையம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் பொதுமக்களுக்கு ஆர்சனிக் ஆல்பம் மாத்திரை வழங்கல்

செங்கம் அடுத்த புதுப்பாளையம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் பொதுமக்களுக்கு ஆர்சனிக் ஆல்பம் மாத்திரை வழங்கல்

எழுதியவர்: mohan July 23, 2020, 5:57 pm

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் பொதுமக்களுக்கு ஆர்சனிக் ஆல்பம் மாத்திரை வழங்கப்பட்டது. நிகழ்விற்கு லயன்ஸ் கிளப் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். சாசன தலைவர் தங்கவேலன் முன்னிலை வகித்தார். புதுப்பாளையம் டவுன் பகுதியிலும் கிராமப்புற பகுதிகளிலும் குழுமியிருந்த பொதுமக்களிடத்தில் கரோனா தொற்று பாதுகாப்பிலிருந்து பொதுமக்கள், குழந்தைகளை தற்காத்து கொள்வது குறித்தும், முககவசம் அணியும் முறைகள் பற்றியும் விளக்கி கூறினர். பின்னர் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு ஆர்சனிக் ஆல்பம் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. நிகழ்வின்போது லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் கந்தன், அண்ணாதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செங்கம் செய்தியாளர் சரவணகுமார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!